Share on Social Media


இதுபற்றி விளக்குகிறார் அவசரகால சிகிச்சை மருத்துவர் சாய் சுரேந்தர்.

“இன்ஸ்டன்ட் வாழ்கையை நோக்கி ஓட ஆரம்பித்த பிறகு, நம் பாரம்பர்ய வாழ்க்கை முறையை மறந்துகொண்டு வருகிறோம். அதில் நமது உணவுமுறையும் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது.

முன்பெல்லாம் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் வயதானவர்களுக்குத்தான் வந்தன. ஆனால், இன்று 20-களில் உள்ளவர்களுக்கே வாழ்க்கைமுறை சார்ந்த இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், பெண் பிள்ளைகள் சீக்கிரம் பூப்பெய்துவது, ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவது, புற்றுநோய் போன்ற பல பிரச்னைகளுக்கு உணவுமுறைதான் காரணமாக அமைகிறது.

வேலைப்பளுவைக் குறைக்கும் என்பதற்காகவோ பசித்த உடன் சாப்பிட வேண்டும் என்பதற்காகவோ பல உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாகிவிட்டது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதையும் அவற்றை ஃபிரிட்ஜில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். அவற்றில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உணவுகெடாமல் பாதுகாக்கும், ஆனால், அவற்றைச் சாப்பிடுபவர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.